வேடுவ மக்களின் சார்பில் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம்

Report Print Steephen Steephen in அரசியல்

மஹியங்கனை - தம்பனை பிரதேசத்தை சேர்ந்த வேடுவ மக்களின் சார்பில் தமது பரம்பரையை சேர்ந்த ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தான் தீர்மானித்துள்ளதாக வேடுவர்களின் தலைவரான ஊறுவரிகே வன்னியலெத்தோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் முறையில் வேடுவ மக்களின் உரிமைகள், அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பும் நோக்கில் மாகாணசபைகள், நகரசபை மாத்திரமல்லாது நாடாளுமன்றத்திற்கும் செல்ல வேடுவ மக்களில் படித்த இளைஞர் ஒருவர் அரசியலுக்கு வருவதை தான் எதிர்க்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வேடுவ மக்கள்சேனை பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ, வேறு நாளாந்த தேவைகளுக்காகவோ காடுகளுக்குள் செல்ல முடியாதபடி வானப் பாதுகாப்புச் சட்டம் செயற்படுத்தப்படுகிறது.

இப்படியான பிரச்சினைகள் சம்பந்தமாக அரசின் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் மக்களுக்கு தேவையான விடயங்களை முன்வைக்க முறையொன்று அவசியம்.

வேடுவ மக்களின் சார்பில் ஹேனானிகல வேடுவ பரம்பரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும், அவர் வெற்றி பெற்றால் அது வேடுவ மக்களின் வெற்றியாக இருக்கும் எனவும் வன்னியலெத்தோ குறிப்பிட்டுள்ளார்.