அமைச்சரவையில் மாற்றம்??

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

மத்திய பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர் ஏற்படும் அரசியல் நிலைமைகள் குறித்து அவதானித்து அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை கவனத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மேலும் அமைச்சுக்களின் செயற்பாடுகள் பற்றியும் ஆராய ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியது.

இந்த நிலையில் உடன்படிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா, இல்லையா என்பதும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் முடிவு செய்யப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.