மைத்திரி எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி, ஆணைக்குழு அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். அதன் பின்னர் ஏற்படவுள்ள அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு மேலதிகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை கருத்திற் கொண்டு அமைச்சரவையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு அமைச்சுக்களினதும், செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் காணப்படுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இணக்கப்பாட்டு அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.