சவால் விடுத்தால் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எவராவது சவால் விடுத்தால் அதனை நிரூபித்து காட்ட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்க கூட்டணி அரசாங்கத்தை வேண்டாம் என கூறினால், ஐக்கிய தேசிய முன்னணியின் தனியான அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக்கட்சி தயாராக இருக்கின்றது எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.