தொடர்ந்தும் உடைந்து வரும் வீரவங்சவின் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர் பிரேமலால் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் சந்தித்த பிரேமலால் பொன்சேகா, ஊழல், மோசடியற்ற அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக கூறியுள்ளார்.

விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் படிப்படியாக அந்த முன்னணியில் இருந்து, விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.