பிரபாகரனின் நிலைப்பாட்டை ராஜிவ் காந்தியிடம் எடுத்துரைத்த எம்.ஜீ.ஆர்!

Report Print Ajith Ajith in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் விளக்கமளித்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை தொடர்பான 'ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்' என்ற நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

ஹிந்து நாளிதழின், சிரேஷ் ஆசிரியரான ரி.ராமகிருஷ்ணனால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் வரையான விடயங்கள் உள்ளடங்களாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்தான், பிரபாகரனின் நிலைப்பாடு தொடர்பில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் விளக்கமளித்ததாக ஹிந்து நாளிதழ் குழு மத்தின் தலைவர் என். ராம் இதன்போது தெரிவித்துள்ளார்.

தனி இராச்சியமின்றி பிரபாகரன் சமரசமடைய மாட்டார் என்றும் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருந்தாகவும் ஹிந்து நாளிதழ் குழுமத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்த இடைவெளி, ஒருபோதும் நிரப்ப முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழீழத்துக்காக இந்திய மத்திய அரசு மட்டுமல்லாது, தமிழ்நாடு அரசும்கூட ஆதரவளிக்காது என ஹிந்து நாளிதழ் குழுமத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார்.