மகிந்தவை அடியொற்றி மைத்திரி செய்யவிருக்கும் செயல்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தனது பதவிக் காலம் குறித்து ஜனாதிபதி உச்ச நீதிமன்றம் செல்வதற்கு முன்னர் பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தால் நல்லது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தின்படி, தன்னுடைய பதவிக் காலம் 2020ம் ஆண்டு முடிகிறதா? அல்லது 2021ம் ஆண்டு முடிகிறதா என தான் அறி ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.

ஜனாதிபதியின் சந்தேகத்திற்கு உச்ச நீதிமன்றம் பதில் வழங்கியிருக்கிறது. எதிர்வரும் 2021ம் ஆண்டுவரை பதவியில் நீடிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை தான் ஏற்பதாகவும், இன்றே பதவி விலகச் சொன்னாலும் நான் பதவி விலகத் தயார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடு குறித்து கேட்ட போதே அமைச்சர் இந்தக் கருத்தினை முன்வைத்திருக்கிறார்கள். தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர்,

தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியமை, அவரை ஆட்சியில் அமர்த்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிவில் சமூகத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் அவர் விளக்கம் கோருவதற்கு முன்னர், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தால் நல்லது. இது அரசாங்கத்தின் பங்காளிகளிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆறு ஆண்டுகள் என்று வந்தாலும் கூட, 5 ஆண்டுகளின் பின்னர், ஜனாதிபதி முன் கூட்டியே தேர்தலை அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னுடைய இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்காலம் இருக்கும் பொழுதே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருந்தார். எனினும் அவர் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியும் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னார் தேர்தலை நடத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் கருத்துக்கள் மகிந்தவின் செயற்பாடோடு ஒத்துப் போவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதுவாயினும் தான் அடுத்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முடிவினை இன்னமும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.