நாடாளுமன்றில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்றில் குழப்பம் விளைவித்த உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மிகவும் இழிவான முறையில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் மோதிக் கொண்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச அரசியல்வாதிகளை நல்வழிப்படுத்த வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.