தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு - புத்தூர் பகுதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா.அசோக் எனும் வேட்பாளரின் அலுவலகம் மீதே நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அலுவலகத்தினை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், தோல்வி பயத்தில் இருப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.