மைத்திரி - மகிந்தவை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதே ஐ.தே.கட்சியின் நோக்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி விட்டு ஐ.தே.கட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்து வருவதாக பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே தான் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் பிரேலால் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.