ஜே.வி.பி உறுப்பினருக்கு எதிராக வழக்கு தொடரும் ஊவா முதலமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன மற்றும் அந்த முன்னணியின் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த 2 பிரதிநிதிகளிடமும் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபரை தான் மண்டியிட செய்ததாக அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்களால், தனது நற்பெயருக்கு பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கை தொடரவுள்ளதாகவும் சாமர சம்பத் கூறியுள்ளார்.

முதலமைச்சர் இது சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டின் பிரதியை பெற பதுளை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு இன்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.