அடுத்த வாரம் இலங்கை வரும் இரு அரச தலைவர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

இரண்டு வெளிநாடுகளின் அரச தலைவர்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேங் லு மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோ விடேடோ ஆகியோரே இலங்கை வரவுள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், இந்தோனேசிய ஜனாதிபதி எதிர்வரும் 25ஆம் திகதி வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்புக்கு அமைய இந்த அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் இந்த அரச தலைவர்கள் இருத்தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமரின் விஜயத்தின் போது, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.

இதனிடையே இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள லித்வியா ஜனாதிபதி ரைமன்டிஸ் வேயோனிஸ், எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.