ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தே எனக்கு அச்சுறுத்தல்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தே தமக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

எனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏழு பேரில் ஐந்து பேர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். நான் அமைச்சராக இருந்த காலத்திலேயே எனக்கு ஏழு பேர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

பாதுகாப்பு நீக்கப்பட்டதில் பிரச்சினையில்லை.எனினும் அனைவருக்கும் ஒரே விதமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட காரணத்தினால் எனது அமைச்சுப் பதவி பறிக்கப்படவில்லை.

ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்ற உறுப்பினராவார், எனினும் அவருக்கு பதினொருவர் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

ரவி கருணாநாயக்கவின் பாதுகாப்பில் கைவைக்க வேண்டாம். விஜயதாசவின் பாதுகாப்பினை குறையுங்கள என பொலிஸ் மா அதிபர் கூறியதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் கிடையாது. எனினும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனது பாதுகாப்பினை கூட்டுமாறு நான் கோரப்போவதில்லை.

என்னைத் தாக்கினால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களேயாவர்.

ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தே எனக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Latest Offers