புறக்கணிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம்?

Report Print Sujitha Sri in அரசியல்

சீனாவின் உதவியுடன் இலங்கையில் 13 மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அதில் வட மாகாண மருத்துவமனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மீரிகம தள மருத்துவமனையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கும் போது,

இலங்கையில் 13 மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

அந்த வகையில், பேருவளை, அளுத்கம, சம்மாந்துறை, ஏறாவூர், பொத்துவில், பொலன்னறுவை, பதவிய, வலஸ்முல்ல, கலவான, மகியங்கனை, ரிக்கில்லாகஸ்கட, கராப்பிட்டிய ஆகிய மருத்துவமனைகளே அபிவிருத்தி செய்யப்படவுள்ள மருத்துவமனை பட்டியலில் அடங்குகின்றன.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரமானது விரைவில் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கருத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தியானது அந்த ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.