கோத்தபாய அமெரிக்க பிரஜை? நாட்டிற்கு உண்மை வெளிப்படுத்தப்படும்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையா என்பது குறித்து சாட்சியங்களுடன் விசேட விசாரணை நடத்தப்பட உள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் குடியுரிமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளைப் போன்றே இந்த விசாரணையும் நடத்தப்படும்.

அந்தவகையில், கோத்தபாய தொடர்பிலும் விசாரணை நடத்தி நாட்டிற்கு உண்மை வெளிப்படுத்தப்படும்.

இரட்டைக் குடியுரிமை உடைய ஒருவருக்கு இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியாது, நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என அவர் குறிப்பிட்டள்ளார்.