எனது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பிணை முறி மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பிணை முறி மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்றைய தினம் பங்கேற்றிருந்த போது மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதனைப் போன்று எனது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தம்மால் உறுதிப்படுத்திக் குறிப்பிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தேவையான தகவல்கள் திரட்டப்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.