எந்த முன்னேற்றமும் இல்லை: விமல் குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் இதுவரை எந்த முற்போக்கான வேலைத்திட்டங்களையும் செய்யவில்லை.

அதேபோல் நாட்டில் உள்ள பெண்கள் எவரும் மது அருந்த அனுமதி தாருங்கள் எனக் கூறி ஊர்வலம் செல்லவில்லை.

நிதியமைச்சு வெளியிட்ட மதுபான விற்பனை நிலையங்கள் சம்பந்தமான மற்றும் ஏனைய சுற்றறிக்கைகளை ஜனாதிபதி இரத்துச் செய்துள்ள போதிலும் அவரது உத்தரவு அமுல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers