ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆகிய ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை இன்று காலை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையை ஆராய்ந்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் 26 பிரதிகளும், பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 34 பிரதிகளும் நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.