அவசரமாக கூடிய ஐ.தே.கட்சியின் செயற்குழு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு இன்று முற்பகல் அவசரமாக கூடியுள்ளது.

இன்றைய செயற்குழுக் கூட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,

கட்சியின் அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் பற்றி கலந்துரையாட செயற்குழு கூட்டப்பட்டது.

இதன் போது எமது அடிப்படை இலக்கு அடையாளம் காணப்பட்டது. மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமதமாக கட்சி எவ்வாறான நடைமுறையை கையாளப் போகிறது என்பது பற்றியும் கலந்துரையாடினோம்.

கட்சியின் பிரதான சிரேஷ்ட உறுப்பினர் இன்றைய கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.மேலும் ஜனாதிபதி சம்பந்தமாக விமர்சனங்களை முன்வைப்பதில்லை என்றும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் சம்பந்தமாக அவர்களை இலக்கு வைத்து பதிலளிக்க வேண்டுமே தவிர ஜனாதிபதியை இலக்கு வைக்கக் கூடாது என்ற தீர்மானத்தை செயற்குழு எடுத்துள்ளது எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.