இணையத்தில் வெளியாகும் பிணைமுறி விசாரணை அறிக்கை

Report Print Mubarak in அரசியல்

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை அறிக்கை இன்றைய தினம் இணையத்தில் வெளியாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அதற்கான உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், இன்று நண்பகல் வேளையில் இணையதளத்தில் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.