ஜனாதிபதி கோபத்துடன் எழுந்து சென்றாரா?

Report Print Akkash in அரசியல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து பலர் பல தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே ஜனாதிபதி நீதிமன்றை நாடினார் என கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

19ஆவது திருத்தச்சட்டத்தின் படி 2019ஆம் ஆண்டு வரையே ஜனாதிபதியின் பதவிக்காலம் என்று ஒரு சிலரும், 2021ஆம் ஆண்டு வரையே பதவிக்காலம் என்று வேறு சிலரும் பரவலாக குறிப்பிட்டு வந்தார்கள்.

இவ்வாறு ஏற்பட்ட குழப்பத்தை தீர்ப்பதற்காகவே ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடினார்.

மேலும், ஜனாதிபதி நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து கோபத்துடன் செல்லவில்லை. அவசர தேவைகள் வருமிடத்து அனைவரும் வெளியே செல்லத்தான் வேண்டும். அவ்வாறுதான் ஜனாதிபதியும் சென்றார் என மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.