பிரதமரை திருடன் என்று கூற ஜனாதிபதிக்கு உரிமையில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகார ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஊடகங்கள் வாயிலாக விமர்சனம் செய்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருடர் என பொருள்படும் படி கூறியதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அப்படி கூற ஜனாதிபதிக்கு எந்த தார்மீக உரிமையும் எனவும் அதனை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பிரதமர் ரணில் பதிலளிக்க முயற்சித்த போது அதற்கு எதிராக கூச்சலிட்டு கல்லெறிய சிலர் தூண்டப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தை நீடிக்கும் வழியை தேடி வருகிறார். ஜனாதிபதி அதிகாரத்தை நீடிக்க வழியை தேடினால், அதற்கு எதிராக போராட தயார் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers