மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்கள்

Report Print Sumi in அரசியல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அம்பலப்பட்டு நிற்கின்றார்கள். தமது பிரச்சினைகளைக் கூட மக்களின் நலன் சார்ந்ததாக யோசிக்காமல் இருக்கின்றார்கள்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை தமிழ் மக்கள் வழக்கமாக வாக்களித்த தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் யதார்த்தமாக சிந்திக்க கூடிய மாற்று தலைமைகளுக்கு வாக்களிக்க நினைக்கிறார்கள்.

இதனை அண்மைக்காலத்தில் நான் கலந்து கொண்ட மக்கள் சந்திப்புக்களில் மக்கள் பேசிய விடயங்கள் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.