எஸ்.எம்.மரிக்கார் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோருமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காருக்கு, கட்சியின் தலைவரான பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால், அதன் பயன் எதிர்க்கட்சிக்கு கிடைக்கும் என பிரதமர் கூட்டத்தில் கூறியுள்ளார்.

இதனால், தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி எதிர்க்கட்சியை வலுப்படுத்தக் கூடாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே ஜனாதிபதியை விமர்சித்தமை குறித்து அவரை சந்தித்து கட்டாயம் மன்னிப்பு கோர வேண்டும் என பிரதமர், மரிக்காருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், அவரது நிலைப்பாடு கட்சியின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க அவ்வப்போது ஊடகங்களில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு முரண்பாடான, பிரபலமாகும் கருத்துக்களை வெளியிட்டு வருவதன் காரணமாகவே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.