லயத்து வாழ்க்கை மீண்டும் ஆரம்பமாகும் : திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

யானைக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து செயற்படுத்துவோம் என்றும் இல்லை என்றால் லயத்து வாழ்க்கை மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அதிகாரம் கிடைத்த மூன்று வருட காலப்பகுதியில் ஐம்பது, நூறு என ஆரம்பித்து 5000 வீடுகளை கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனக்கு மூன்று வருட காலப்பகுதியில் 5000 வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட முடியாது என்றும் திகாம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னை பொறுத்தவரையில் தோட்ட தொழிலாளர்கள் கௌரவமாக வாழ வேண்டும்.

அண்மையில் கூட அமைச்சரவையில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உறுதி வழங்க தேவையில்லை என்று கூறினார்கள்.

நான் அவர்களுக்கு நிலையான காணி உறுதி பத்திரம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

அதனை கேட்ட பிரதமர் இப்போது எவ்வாறான உறுதிகளை வழங்குகிறீர்களோ அவ்வாறே செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஓர் நல்ல மனிதர், அவர் ஒரு போதும் இனவாதம் பேச மாட்டார். எனவே யானைக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து செயற்படுத்துவோம்.

இல்லை என்றால் லயத்து வாழ்க்கை மீண்டும் ஆரம்பமாகும் எனவும் திகாம்பரம் கூறியுள்ளார்.