விஜேதாசவின் முறைப்பாட்டால், ரவி கருணாநாயக்கவின் பாதுகாப்பு குறைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு சில தினங்களுக்கு முன்னர் திரும்ப பெறப்பட்டது.

விஜேதாச ராஜபக்சவை போல் அமைச்சராக பதவி வகித்து தற்போது சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் ரவி கருணாநாயக்கவுக்கு மாத்திரம் 9 பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை வழங்க முடியும் என, ராஜபக்ச, அமைச்சரவை பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சரவை, பாதுகாப்புப் பிரிவு ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த 9 பாதுகாப்பு அதிகாரிகளில் 7 பேரை திரும்ப பெற்றுள்ளது.