புலிகளின் ராஜதந்திர வழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Thileepan Thileepan in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் சோரம் போகாமல் விடுதலைப் புலிகளைப் போன்று இராஜ தந்திரத்தையே கடைப்பிடிக்கிறது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான தேர்தல் என்பதைக் கடந்து சில அரசியல் ரீதியான முரண்பாடான கருத்துக்களை இந்த தேர்தலில் பலர் முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களில் அரசுக்கு ஆதரவாக செயற்படுவதான குற்றச்சாட்டை இன்று பலர் முன்வைத்து வருகின்றனர்.

கூட்டமைப்பையும், அவர்களது வடக்கு - கிழக்கு பிரதேசத்தையும் சிதைப்பதற்கான வேலைகள் தென்னிலங்கையில் நடைபெறுகின்றது.

ஆயுத பலம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்தப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது.

புதிய அரசியலமைப்பு மாற்றம் பெறுகின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சமூகத்திடம் நியாயம் கேட்கும் வகையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காய்களை நகர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஜனாதிபதியிடமோ சோரம் போகவில்லை என்றும் கூறியுள்ளார்.

போராட்டத்திலும் சரி, அரசியலிலும் சரி சில இராஜதந்திரங்களுடன், உருவாக்கப்பட்ட மற்றும் செயற்பட்ட வரலாறுகளை நாம் பார்க்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers