Oops. Something went wrong. Please try again later
Desktop

தகுதி தராதரம் பாராமல் நடவடிக்கை: சிறிகொத்தவில் முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுத்த முடிவுக்கு அமைய இந்த குழுவை கட்சி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அப்படி எவர் மீதாவது குற்றம் சுமத்தப்பட்டிருக்குமாயின் அவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers