சிரித்துக் கொண்டே ரணிலை மோசமாக கிண்டலடித்த மகிந்த!

Report Print Rakesh in அரசியல்
285Shares

மேர்வின் சில்வா நாடாளுமன்றில் இல்லாத குறையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்த்துவைத்துள்ளார் என்று கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது கிண்டலடித்துள்ளனர்.

கூட்டு எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று முற்பகல் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவ்வணியின் உறுப்பினர்கள் பிரதமரை மேற்கண்டவாறு விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சிரித்துக்கொண்டே, மேர்வின் சில்வாவை விடவும் மோசமாகத்தானே ரணில் நடந்துகொண்டார் என்று கிண்டலடித்தார் என்றும் தெரியவந்துள்ளது.

தேர்தல் செயற்பாடுகள், சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே நேற்றைய தினம் இக்கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி அறிக்கை இன்று புதன்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டவுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது குறித்துப் பேசப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் நடந்துகொண்ட விதம் குறித்து கருத்து வெளியிடுவது, அடுத்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது ஆகிய விடயங்கள் தொடர்பிலேயே விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதாக அவ்வணியின் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது.