நீண்டகாலமாக தொடரும் பிரதான கட்சிகளுக்கு இடையிலான மோதல்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் கருத்து மோதல்கள், ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொள்வது என்பது நீண்டகாலமாக இருந்து வருவதாகவும் அது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நீர்பாசனம் மற்றும் நீரியல் வள ராஜாங்க அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி தேசிய அரசாங்கம் என்பது ஒரு குடும்பம். இதுவரை எந்த பாரதூரமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை. இதனால், 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தின் பயணத்திற்கு இந்த பிரச்சினைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தேசிய அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலைமை நீண்டகாலமாக இருந்து வருகிறது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா ஆகியோர் ஊடக சந்திப்புகளில் பிரதமருக்கும் ஆளும் கட்சியின் மீது தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு பதிலளிக்க தொடங்கினர். இது சிறந்த நிலைமையல்ல எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers