அலோஸியஸுடன் தொடர்பிலிருந்த கோப் குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

கோப் குழுவில் இடம்பெற்ற பிணை முறி விநியோக விசாரணைகளின்போது அர்ஜுன் அலோஸியஸுடன் தொடர்பிலிருந்த கோப் குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமா அதிபர், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அரச துறையில் உள்ள சட்ட ஆய்வாளர்கள் ஆகியோரை அழைத்து ஜனாதிபதி இன்று கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே குறித்த விடயம் சபாநாயகரிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கோப் குழுவில் இடம்பெற்ற விசாரணைகளின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் அர்ஜுன் அலோஸியஸுடன் தொடரபு வைத்திருந்தாகக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.