நாட்டை அபிவிருத்தி செய்யும் சவால்களை ஏற்றுக்கொண்ட ஐ.தே.க

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டை அபிவிருத்தி செய்யும் சவால்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை அபிவிருத்தி செய்யும் சவால்களை ஏற்றுக்கொள்கின்றது. 2025ம் ஆண்டில் முன்னேற்றமடைந்த இலங்கையை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சுயாதினமான சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

கிராமங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை உறுதி செய்வதன் மூலம் கிராமங்களை பலப்படுத்த முடியும்.

ராஜபக்ச ஆட்சிக் கால பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் திருப்தி இருக்கவில்லை.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.