துபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உதயங்க வீரதுங்க

Report Print Steephen Steephen in அரசியல்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லும் நோக்கில் துபாய் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் விமானப்படைக்கு மிக் தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் நிதி மோசடி நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கலுடன் உதயங்க வீரதுங்கவும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.