தேர்தலுக்கு பின்னரும் மைத்திரி - ரணில் அரசாங்கம் தொடரும்

Report Print Steephen Steephen in அரசியல்

பிணை முறிப்பத்திர விவகாரத்தினால் தனது தூயதன்மைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தேசிய பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் கடும் விமர்சனங்களுடன் கூடிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி மற்றும் தனது தலைமையிலான அரசாங்கத்தை எந்த பிரச்சினையும் இன்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறிப்பத்திர விவகாரத்தினால், ஐக்கிய தேசியக்கட்சிக்கு எந்த கரும்புள்ளியும் ஏற்படவில்லை. கட்சி மிகவும் வெளிப்படை தன்மையுடன் அரசாங்கத்தில் இருந்து செயற்படும்.

ஊடகங்கள் தொடர்ந்தும் இந்த விடயம் சம்பந்தமாக தாக்குதல்களை தொடுத்து வந்தாலும் தான் கவலையடைய போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.