வடக்குடன் இணைந்து செயற்படுவதில் அரசாங்கம் தோல்வி: முதலமைச்சர் குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது வட மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சராக தாம் உள்ள நிலையில், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே அழைக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறியதாக வாராந்த ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

திட்டங்கள் குறித்து அரசாங்கம் முதலில் வட மாகாண சபையுடன் கட்டாயமாக கலந்துரையாட வேண்டும் என்றும், அவற்றை நடைமுறைப்படுத்தும்போது, வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவேண்டும் எனறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மட்டுமல்லாது, அனைத்து மாகாணங்களுக்கும் சமஷ்டி தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.