கொழும்பு நகரம் தாழிறங்காது என்ற போதிலும் கட்டடங்களுக்கு ஆபத்து?

Report Print Sujitha Sri in அரசியல்

துறைமுக நகரத்திட்டத்தால் கொழும்பு நகரம் தாழிறங்காது என்ற போதிலும் நிலத்தடியின் கீழ் இணைக்கப்படாத கட்டடங்களுக்கு ஆபத்து என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ள காணொளியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும்,

துறைமுக நகரத்திட்டத்தில் மண் நிரப்பப்படுவதால் நீர்மட்டம் அதிகரிக்கும். அத்துடன் நிலத்தடியின் கீழ் இணைக்கப்படாத குறிப்பாக பழைய நாடாளுமன்றக் கட்டடம், ஜனாதிபதி செயலகம், தபால் கட்டடம் என்பவற்றிட்கு ஆபத்து.

நீர் மட்டம் கட்டாயம் அதிகரிக்கும் என்பதால் இதிலிருந்து கட்டடங்களைப் பாதுகாக்க கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொழும்பில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகம்.

அதனால் சில பாதிப்புக்கள் தற்போதே ஏற்பட வேண்டும் என்ற போதிலும் இதுவரையில் அவ்வாறான பாதுப்புகள் எதுவும் நேரவில்லை. எனினும் எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்துள்ளார்.