மைத்திரியுடன் இணைய மஹிந்த தயார்?

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிபந்தனை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என அவருக்கு நெருக்கமான தரப்பினரை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நிபந்தனைகளுக்கு இணங்கினால் மாத்திரமே ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது குறித்து பேசத் தயார் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியை வலியுறுத்திவருகின்றன.

இந்த நிலையில், 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் ஆட்சியமைக்கத் தயார் என்றும், தமது பயணத்தில் கைகோர்க்க வருமாறு அண்மையில் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.