மைத்திரியை சந்தித்து முக்கியமான தகவல்களை கூறிய ரவி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான சகல தகவல்களையும் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியிடம் கூறியதாக தெரியவருகிறது.

இலங்கை மத்திய வங்கி தனது பொறுப்பின் கீழ் இருந்த நிதியமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுவரை வெளியாகாத முக்கியமான பல தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.