மலையகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Report Print Thirumal Thirumal in அரசியல்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மலையகத்திலும் பல சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் நுவரெலியாவில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா சினிசிட்டா விளையாட்டரங்கில் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றது.

அங்கு இலங்கையின் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டதோடு, கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இதேவேளை, ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று சுதந்திரதின நிகழ்வுகள் பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய கொடியேற்றபட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, இந்த 70வது சுதந்திர தின நிகழ்வில் மேலும் பல பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

அத்தோடு, ஹட்டன் நீக்ரோதாரம விகாரையில் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றது.

விகாரையின் விகாராதிபதி மாகம விமல தேரர் தலைமையில் தேசிய கொடியேற்றபட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.