நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

நாளை முற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மத்திய வங்கி பிணை முறிப்பத்திரம் மற்றும் பாரிய, ஊழல்,மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சம்பந்தமாக நடக்கும் விவாதம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளதுடன் அதன் பின்னர் அடுத்த தினங்களையும் விவாதத்தை நடத்துவதா இல்லையா என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

மேலும் விவாதத்தில் கட்சிகளுக்கு வழங்கப்படும் நேரம் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.