இவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்! நம்பிக்கையிழந்த மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாங்கள் வாங்கிய கடனை விட இந்த அரசாங்கம் இரண்டு மடங்கு கடனை பெற்று நாட்டை அழித்துவருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

கெகிராவை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற, தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய போது, இன்றைய அரசாங்கத்தின் மீது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இதன் போது அங்கு தொடர்ந்து பேசிய மகிந்த, தற்போதைய அரசாங்கத்தினருக்கு உரிய முறையில் கணிப்புக்களை மேற்கொள்ள தெரியவில்லை.

மில்லியனுக்கு பில்லியன் எனவும், பில்லியனுக்கு ட்ரில்லியன் எனவும் கணிப்புக்களை மேற்கொள்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் நாங்கள் வாங்கி கடனை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான கடனைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் மூலம் எந்த அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.