தயவு செய்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ரணிலிடம் மோடி வேண்டுகோள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தயவு செய்து எனது கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் 70வது சுதந்திர தினம் இன்று. இலங்கை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பொருட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாழ்த்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டதாவது,

இலங்கையின் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புகிறோம். எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, கலாசார அடிப்படையில், உண்மையான பன்மைத்துவத்துடன் வளர்ந்து வந்திருக்கிறது.

இந்தப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பும், எதிர்பார்ப்பும் ஆகும்.

எமது நாடுகளில் உள்ள மக்களின் பரஸ்பர நன்மைக்காக, உயர் மட்டங்களில், குறிப்பாக பொருளாதாரத் துறையில், நமது உறவை அதிகரித்துக் கொள்வதற்கு தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்.

தயவுசெய்து எனது கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் நல்ல ஆரோக்கியம், தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் நட்புடைய இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு எனது வாழ்த்துக்கள் என்று இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.