வடக்கில் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் கூட்டமைப்பு - டக்ளஸ்

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பில் வடக்கில் வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் உதவியின் கீழ் வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மானிக்கும் திட்டத்தை தாமே கொண்டுவந்ததாக கூட்டமைப்பினர் வடக்கில் வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த திட்டமானது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்துக்கு இந்தியா இணங்கியிருந்தாகவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.