அதிரடி கைதுகள் குறித்து மனோ வெளியிட்ட கருத்து?

Report Print Ajith Ajith in அரசியல்

சுதந்திர தினத்தில் இடம்பெற்ற கைதுகள் இலங்கையர்களுக்கு புதிய நம்பிக்யை கொடுத்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சுதந்திர தினத்தில், பெப்பர்ச்சுவல் ட்ரெசறீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோரின் கைதுகள் இலங்கையர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.