பிணை முறி விவகாரம்! நாளை கூடும் எதிர்க் கட்சித் தலைவர்கள்

Report Print Aasim in அரசியல்

பிணைமுறிகள் விற்பனை மோசடி தொடர்பான நாடாளுமன்ற விவாதம் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

திங்கள் காலை ஒன்பதரை மணியளவில் இக்கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற விவாதத்தின் போது ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் நேரம் குறித்த தீர்மானங்களும் இந்த கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.