சுதந்திர தினத்தில் மகிந்தவின் கவலை இப்படியிருக்கிறது! நல்லாட்சி செய்யும் வேலையால் வந்த வினை?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து ஒற்றையாட்சியை காப்பது சவாலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டன். இன்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், இலங்கை பிரித்தானியாவின் காலனித்துவத்தில் இருந்த போது பிரித்தானியர்கள் கூட இலங்கையின் ஒற்றையாட்சியை பாதிக்கும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளையும் செய்யவில்லை.

காலனித்துவ ஆட்சி விடுபட்ட இத்தனை ஆண்டுகளில் இன்று நல்லாட்சி அரசாங்கம் அதை மீறுகிறது.

இந்த அரசாங்கத்திடம் இருந்து நல்லாட்சியை காப்பாற்றுவது மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. ஒற்றையாட்சியைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் போராட வேண்டியிருக்கிறது.

ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிரப்படுவதற்குஅரசாங்கமும் தமிழ் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ள போதும் அவ்வாறான அரசியலமைப்பை ஏற்படுத்துவது ஒற்றையாட்சியைப் பாதிக்கும் என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.