இந்தியாவிற்காக இலங்கையை அச்சுறுத்தும் சீனா!

Report Print Murali Murali in அரசியல்

சீனா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக ஆசியாவின் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவினை விரிசலடைய செய்யும் என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவுக்கு அண்மையில் உள்ள நாடுகளுடன் உறவுகளை பேணுவதற்கு சீனா பொருளாதார ரீதியில் அச்சுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா- கொல்கத்தாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கையில் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக இலங்கையை பொருளாதார ரீதியில் அச்சுறுத்தி வருகின்றது.

நேபாளம், மாலைதீவு, பங்களாதேஸ், உள்ளிட்ட இந்தியாவிற்கு அண்மையில் உள்ள நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள, பொருளாதார அச்சுறுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளில் சீனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. தனது இருப்பை நிலைப்படுத்தும் நோக்கிலேயே சீனா இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனா முன்னெடுத்துள்ள இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக ஆசியாவின் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவினை விரிசலடைய செய்யும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.