பகல் கொள்ளையில் ஈடுபட்ட மஹிந்த!

Report Print Kamel Kamel in அரசியல்

மத்திய வங்கி பிணை முறி மோசடியை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடி மத்திய வங்கி பிணை மோசடி கிடையாது. பிணை முறி கொடுக்கல் வாங்கல்களிலும் மோசடி இடம்பெற்றது. கள்வர்களை சிறையில் அடைத்துவிட முடியும்.

எனினும், நடுப் பகலில் மஹிந்த பாரிய கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார்.

மஹிந்தவின் நடவடிக்கைகள் சரியில்லை என்ற காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மக்கள் ஜனாதிபதியாக நியமித்தனர்.

நாட்டை பாதுகாத்துக் கொடுத்த காரணத்திற்காக கிராமங்களின் அபிவிருத்தியை தடுத்து நிறுத்த முடியாது என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.