தேர்தலின் பின்னர் சிறிசேனவிற்கு முற்றுப் புள்ளி: வசந்த சேனாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலனறுவை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலின் பின்னர் போதைக்கு முற்றுப் புள்ளி வைப்பதனை விடவும் மைத்திரிபால சிறிசேனவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இன்னும் 18 மாதங்களே பதவியில் நீடிக்க அவகாசம் உண்டு.

அதன் பின்னர் அவர் முடிந்தார். பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கூட கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவேனும் தெரிவாகியிருந்தார்.

மைத்திரிபாலவின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் முற்றுப்புள்ளியாகவே அமையும்.

மைத்திரிபால சிறிசேனவினால் ஊருக்கோ நாட்டுக்கோ நல்லது நடக்கவில்லை என வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.