நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் உரிமையை இழந்து தவிக்க நேரிடும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற தேர்தல் இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. ஆனால், தமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தலின் முடிவு ஒரு கணம் உலகிற்குச் சொல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தமிழர்கள் மாற்று கட்சிகளுக்கு வாக்களித்தால் திருகோணமலை தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும் என்பதை ஒரு கணம் மனதில் கொள்வது அவசியமாகும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.